சிகிச்சையில் மருத்துவ பணியாளர் இறந்தால் 1 கோடி

தினகரன்  தினகரன்
சிகிச்சையில் மருத்துவ பணியாளர் இறந்தால் 1 கோடி

புதுடெல்லி: டெல்லியில் நேற்று டாக்டர்களுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர், அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் உரையாற்றுகையில், ‘‘டெல்லி மாநில அரசை பொறுத்தவரை, கடமையில் இருக்கும்போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடியை இழப்பீடாக வழங்கி வருகிறது. ராணுவ வீரர்களின் சேவையுடன் ஒப்பிடுகையில் டாக்டர்களின் பணியும் அவற்றிற்கு சற்றும் குறைவில்லாதது. எனவே, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை கையாளும் போது சுகாதாரத் துறை பணியாளர்கள் உயிரிழக்க நேர்ந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடாக அரசு 1 கோடி வழங்கப்படும்’’ என்றார்.

மூலக்கதை