நடவடிக்கை! சமூக விலகலை பின்பற்ற போலீஸ் கமிஷனர்... மதுரையில் முக்கிய வழித்தடங்கள் மூடல்

தினமலர்  தினமலர்
நடவடிக்கை! சமூக விலகலை பின்பற்ற போலீஸ் கமிஷனர்... மதுரையில் முக்கிய வழித்தடங்கள் மூடல்

மதுரை : கொரோனா பரவலை தடுக்கும் ஒரே வழி சமூக விலகலே என பல்வேறு வழிகளில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரப்படுகிறது.

இதற்காக ஏப்.,14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மதுரை நகரில் சிலர் சமூக விலகலை புறந்தள்ளி இஷ்டம் போல் தெருக்களில் திரிகின்றனர். காலையில் வாக்கிங் செல்வது, பொருட்களை வாங்க கூட்டமாக வருவது நகரில் அதிகரித்தபடி உள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.இதை தடுக்க முக்கிய ரோடுகள், தெருக்களில் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது. இதை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

காய்கறி கடைகளில் சமூக விலகலை பின்பற்றவும் அறிவுரை வழங்கப்படுகிறது. இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். இப்பணிக்காக ஆயுதப்படை, சிறப்புக்காவல்படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை