கொரோனா ஊரடங்கு; வாகனங்கள் படம் பிடிப்பு!

தினமலர்  தினமலர்
கொரோனா ஊரடங்கு; வாகனங்கள் படம் பிடிப்பு!

கொரோனா ஊரடங்கை, ஏப்., 14 வரை முழுமையாக கடைபிடிக்க, மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. ஊரடங்கை எந்த அளவுக்கு மக்கள் கடைபிடிக்கிறார்களோ, அதற்கேற்ப கொரோனா பரவலை தடுக்க முடியும் என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக அரசின் சார்பில், சிறப்பு அனுமதி அட்டை வழங்கப்பட்ட பின், வாகனங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில், முக்கிய சாலைகளை தவிர, மற்ற சாலைகளில் தடுப்பு வைத்து, வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அனுமதி அட்டை உள்ள வாகனங்கள், போலீஸ், சுகாதாரம், வருவாய் துறை மற்றும் ஊடக துறையினர் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவை மீறி, வாகனங்களில் வருவோரையும், போலீசாரிடம் ரகளை செய்வோரையும், கேமரா வழியாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும், சோதனை சாவடி மற்றும் சாலைகளில் உள்ள போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை