கலைஞர் அரங்கம்; ஸ்டாலின் சம்மதம்

தினமலர்  தினமலர்
கலைஞர் அரங்கம்; ஸ்டாலின் சம்மதம்

சென்னை : சென்னை, அறிவாலயத்தில் உள்ள, கலைஞர் அரங்கத்தை, 'கொரோனா'வால் பாதிக்கப்படுவோர், தனிமைப்படுத்தும் இடமாக பயன்படுத்திக் கொள்ள, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளார்.

தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிக்கை:தி.மு.க., அறக்கட்டளைக்கு சொந்தமான, அறிவாலயம் வளாகத்தில், கலைஞர் அரங்கம் உள்ளது. இதை, 'கொரோனா' தொற்றால் பாதிக்கப்படுவோரை, தனிமைப்படுத்தி வைக்க, பயன்படுத்திக் கொள்ள, ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, எம்.எல்.ஏ.,க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர், மாநகராட்சி கமிஷனர், ஜி.பிரகாஷிடம் நேற்று வழங்கினர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை