கொரோனா பீதியில் 'முட்டாள்கள் தினம்!'

தினமலர்  தினமலர்
கொரோனா பீதியில் முட்டாள்கள் தினம்!

அம்பத்துார் : மக்கள், கொரோனா பீதியில் சிக்கியதால், ஜாலியாக கொண்டாடப்படும் முட்டாள்கள் தினம், இந்தாண்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், ஏப்., 1ம் தேதியை, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட, பலரும் முட்டாள்கள் தினமாக, ஜாலியாக கொண்டாடுவது வழக்கம்.ஆனால், இந்தாண்டு உலகையே அச்சுறுத்தும் கொரோனாவால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் வெளியே வர முடியாத நிலை உள்ளது.

பள்ளி, கல்லுாரிகள் இயங்கினால், அவர்கள், வண்ணப்பொடி மற்றும் வண்ணக்கலவையை தெளித்து விளையாடுவர்.அதே போன்று, இளைஞர்களும், இந்த தினத்தில் நண்பர்களை, தோழிகளை முட்டாளாக்கி மகிழ்வர். கொரோனா பீதியால் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடக்க, முட்டாள்கள் தினம் கண்டுகொள்ளப்படாத நிலையில் உள்ளது.முட்டாள்கள் தினம் தானே என, விளையாட்டாக, கொரோனா குறித்து, தவறான தகவல்களை பரப்பி, சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் சிக்கி கொள்ளாதிருப்பதே யாவருக்கும் நலம்.

மூலக்கதை