ஐநா பாதுகாப்பு கவுன்சில் முதல் முறையாக காணொலி காட்சி கூட்டம் மூலம் 4 தீர்மானங்களை நிறைவேற்றியது

தினகரன்  தினகரன்
ஐநா பாதுகாப்பு கவுன்சில் முதல் முறையாக காணொலி காட்சி கூட்டம் மூலம் 4 தீர்மானங்களை நிறைவேற்றியது

நியூயார்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முதல் முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.   கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 1218 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  குறிப்பாக ஐநா சபை தலைமையகம் உள்ள நியூயார்க்கில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதையொட்டி கடந்த மாத தொடக்கத்தில் ஐநா சபை பணியாளர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றலாம் என அதன் பொதுச்செயலாளர் அன்டனியோ கட்டரஸ் தெரிவித்திருந்தார்.  இதன்படி மார்ச் 16 முதல் ஏப்ரல் 12 வரை இமெயில், தொலைபேசி உள்ளிட்டவை மூலம்  தொடர்புக் கொண்டு பணியாற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சீனாவை உள்ளடக்கிய 15 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் அதன் தலைவர் ஜாங் ஜுன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைதிப்பணியில் ஈடுபடுவோரின் பாதுகாப்பை மேம்படுத்துவது,  வடகொரியா மீதான தடை, கமிட்டியில் பணியாற்றும் நிபுணர்களின் பணிக்காலத்தை புதுப்பிப்பது, சோமாலியாவுக்கு உதவுதல், ஆப்ரிக்காவுடனான ஐநாவின் செயல்பாட்டை தொடர்வது என 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முதன்முறையாக பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் நேரடியாக பங்கேற்காமல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மூலக்கதை