வங்கதேசத்தில் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
வங்கதேசத்தில் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தாகா: வங்கதேசத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 51 ஆக உள்ள நிலையில், 5 பேர் பலியாகி உள்ளனர். இங்கு கடந்த 26ம் தேதி முதல், 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அரசு உயரதிகாரிகளுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்திய பிரதமர் ஷேக் ஹசீனா, ``ஏப்ரல் 4ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு, கொரோனா சமூகப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக வரும் 9ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஏப். 14ல் வங்கதேச புத்தாண்டு நிகழ்ச்சியை ரத்து செய்வது வேதனை அளிக்கிறது’’ என்றார்.

மூலக்கதை