காட்டுத்தீயில் சிக்கி 19 தீயணைப்பு வீரர்கள் பலி

தினகரன்  தினகரன்
காட்டுத்தீயில் சிக்கி 19 தீயணைப்பு வீரர்கள் பலி

பீஜிங்: சீனாவின்  சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ, பலத்த காற்று காரணமாக அருகிலுள்ள மலைப்  பகுதிக்கு வேகமாக பரவியது. இதனால் தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவல்  அறிந்து அப்பகுதிக்கு 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 700  ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை பண்ணைத் தொழிலாளி ஒருவர்  காட்டுக்குள் வழிநடத்தி சென்றார். அப்போது காற்றின் திசையில் ஏற்பட்ட  திடீர் மாற்றத்தால் 18 தீயணைப்பு வீரர்கள், வழிநடத்தி சென்றவர் உள்பட 19  பேர் தீயில் சிக்கி கருகினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை  நடந்து வருகிறது. கடந்த ஆண்டும் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 27 தீயணைப்பு வீரர்கள் உட்பட 30 பேர் பலியாகினர்.

மூலக்கதை