‘வீட்டிலேயே பழைய பனியன் துணியில் முகக்கவசம் தயாரியுங்கள்’

தினகரன்  தினகரன்
‘வீட்டிலேயே பழைய பனியன் துணியில் முகக்கவசம் தயாரியுங்கள்’

புதுடெல்லி: மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நூறு சதவீத காட்டன் துணியின் இரண்டு அடுக்குகள் கொண்டு வீடுகளில் தயாரிக்கப்படும் முகக் கவசம் கொரோனா வைரசை விட சிறிய வகை வைரசைக் கூட 70 சதவீதம் கட்டுப்படுத்த கூடியது. வீடுகளில் இருக்கும் பயன்படுத்தாத பழைய பனியன், டி-சர்ட், கைக்குட்டை ஆகியவற்றைக் கொண்டு இவற்றை தயாரிக்கலாம். முகக் கவசம் தயாரிப்பதற்கு முன் இவற்றை உப்பு கலந்த நீரில் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இந்த முகக்கவசங்கள் மூச்சு விடுவதற்கு எளிதாகவும், மீண்டும் பயன்படுத்த கூடியதாகவும், வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த கூடியதாகவும் உள்ளன. இந்த செயல்முறையைக் கொண்டு தனிநபர்களும், தொண்டு நிறுவனங்களும் முகக் கவசங்களைத் தயாரித்து அனைவரும் பயனடைய செய்யலாம் என்று கூறியுள்ளார்.

மூலக்கதை