சொந்த ஊர் திரும்பும் மக்கள் மீது தெளிக்கப்பட்ட கிருமி நாசினி, மனிதர்களுக்கு வளர்ச்சிதை மாற்றம் ஏற்படுத்தும் ஆபத்தான மருந்து என்பது அம்பலம்

தினகரன்  தினகரன்
சொந்த ஊர் திரும்பும் மக்கள் மீது தெளிக்கப்பட்ட கிருமி நாசினி, மனிதர்களுக்கு வளர்ச்சிதை மாற்றம் ஏற்படுத்தும் ஆபத்தான மருந்து என்பது அம்பலம்

பரேலி; உத்தரப்பிரதேசத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்பிய தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி மருந்து தெளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த மருந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  சொந்த ஊர் திரும்பும் மக்கள் மீது தெளிக்கப்பட்ட கிருமி நாசினிகொரோனா பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தங்கியுள்ள பிற மாநில தொழிலாளர்கள் வேலையின்றி உணவின்றி தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். போக்குவரத்து தடை செய்யபட்டுள்ளதால் கால்நடையாகவே சொந்த ஊருக்கு திரும்பும் நிலை உள்ளது. இதனால் சமூக தொற்று ஏற்படும் நிலை உள்ளது. இவ்வாறு டெல்லியில் தங்கியிருந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பரேலி மாவட்ட பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.அவர்களால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சத்தில் கும்பலாக உட்கார வைக்கப்பட்டு அவர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.மனிதர்களுக்கு வளர்ச்சிதை மாற்றம் ஏற்படுத்தும் ஆபத்தான மருந்து  இதற்கு பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோர் கடும் கண்டங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் தொழிலாளர்கள் மீது தெளிக்கப்பட்ட மருந்து சோடியம் ஹைப்போகுளோரைட் என்ற ரசாயனம் என்பது தெரியவந்துள்ளது.இது புண்களை சுத்தப்படுத்தும் மருந்து என்றும் இதனால் கொரோனா வைரஸ் சாகாது என்றும் தெரியவந்துள்ளது. நீச்சல் குளத்தை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் இந்த ரசாயனத்தின் அளவு 35%த்திற்கும் மேல் தாண்டினால் மனிதர்களுக்கு வளர்ச்சிதை மாற்றப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதே போல் கேரளாவில் சோப்பு தண்ணீர் தெளிக்கப்பட்டதும் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை