உலகளவில் கொரோனாவுக்கு 38,101 பேர் மரணம்.. 789,806 பேர் பாதிப்பு.. 166,733 பேர் குணம்.. 29,661 பேர் கவலைக்கிடம்

தினகரன்  தினகரன்
உலகளவில் கொரோனாவுக்கு 38,101 பேர் மரணம்.. 789,806 பேர் பாதிப்பு.. 166,733 பேர் குணம்.. 29,661 பேர் கவலைக்கிடம்

ரோம் : கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தொட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.உலகளவில் கொரோனா  தாக்கத்தால் 789,806 பேர் பாதித்துள்ளனர். 166,733 பேர் குணமடைந்த நிலையில் 38,101 பேர் உயிரிழந்துள்ளனர். 584,469 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 29,661 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.அதிக உயிரிழப்பாக இத்தாலியில் 11,591 பேரும், ஸ்பெயினில் 7,716 பேரும்,, சீனாவில் 3,305 பேரும், அமெரிக்காவில் 3,172 பேரும், ஐரோப்பாவில் 1,408 பேரும்,பிரான்சில் 3,024 பேரும், ஈரானில் 2,257 பேரும், பெல்ஜியத்தில் 705 பேரும், நெதர்லாந்தில் 864 பேரும் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 164,349 பேருக்கும், இத்தாலியில் 101,739 பேருக்கும் , சீனாவில் 81,518 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினில் 87,956 பேருக்கும், ஜெர்மனியில் 67,051 பேருக்கும், பிரான்ஸில் 44,550 பேருக்கும், ஈரானில் 41,495 பேருக்கும், ஐரோப்பியாவில் 22,141 பேருக்கும், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை