நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,780 ஆக உயர்வு: 7,84,381 பேருக்கு பாதிப்பு

தினகரன்  தினகரன்
நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,780 ஆக உயர்வு: 7,84,381 பேருக்கு பாதிப்பு

டெல்லி: உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,780 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியா உட்பட 183 நாடுகளில்  விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகளவில் நேற்று 33,956 உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3824 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை  37,780 ஆக  உயர்ந்துள்ளது. நேற்று வரை 7 லட்சத்து 21 ஆயிரத்து 330 பேரை பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 63,051 பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,84,381-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து  65 ஆயிரத்து 035 பேர் குணமடைந்து உள்ளனர். இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு 32 பேர் உயிரிழந்துள்ளனர். 1,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 86 பேர் குணமடைந்துள்ளனர். இதனை போல், இத்தாலியில் 11 ஆயிரத்து 591 பேர் பலியாகி உள்ளனர்.  இங்கு, 1,01,739 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 12,384 பேர் சிகிச்சையில் குணமாகி உள்ளனர். ஸ்பெயினில் 7,716 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 87 ஆயிரத்து 956 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் 3,304 பேர் பலியாகி உள்ளனர். 81  ஆயிரத்து 470 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் 2,757 பேர் பலியாகி உள்ளனர். இங்கு 41 ஆயிரத்து 495 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 3,148 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் 3,024 பேர் பலியாகி உள்ளனர்.  44 ஆயிரத்து 550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 645 பேர் பலியாகி உள்ளனர். 66 ஆயிரத்து 885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,408 பேர் பலியாகியுள்ளனர். 22, 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் கொரியாவில் 158 பேர் பலியாகி உள்ளனர். 9 ஆயிரத்து 661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெல்ஜியத்தில் 513 பேர் பலியாகி உள்ளனர். 11 ஆயிரத்து  899 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் 56 பேர் பலியாகி உள்ளனர். 1,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் 37 பேர் பலியாகி உள்ளனர். 2,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் 19 பேர் பலியாகி உள்ளனர். 4 ஆயிரத்து 460 பேர்   பாதிக்கப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானில் 21 பேர் பலியாகி உள்ளனர். 1,717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் 3 பேர் பலியாகி உள்ளனர். 879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை