டெல்லியில் நடந்த மத வழிப்பாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று : டெல்லியில் மட்டும் 24.. மதகுரு மீது வழக்குப் பதிய முதல்வர் உத்தரவு

தினகரன்  தினகரன்
டெல்லியில் நடந்த மத வழிப்பாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று : டெல்லியில் மட்டும் 24.. மதகுரு மீது வழக்குப் பதிய முதல்வர் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தெலுங்கானாவை சேர்ந்த 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.*டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியானது தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமானது. இங்கு மத கூட்டம் ஒன்று கடந்த மார்ச் 13 முதல் மார்ச் 15ம் தேதி வரை  நடைபெற்றது. *டெல்லியில் ஏற்கனவே மார்ச் மாதம் தொடக்கத்திலேயே ஒன்று கூடல்களுக்கு மாநில அரசு தடை விதித்திருந்தது. ஆனாலும் தடையை மீறி இந்த பிரசார கூட்டம் நடைபெற்றது. *இதில் மலேசியா, இந்தோனேசியா, அரேபியா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். *ஆனால் இதுபற்றி டெல்லி அதிகாரிகளுக்கு எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்து வந்தது. *இந்த மத வழிப்பாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழ்நாட்டிலும் குறிப்பாக ஈரோடு பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என தெரியவந்தது. *இந்நிலையில் டெல்லி நிஜாமுதின் நிகர்ச்சியில் பங்கேற்ற பலரும் தெற்கு டெல்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள மக்கள் ஜமாஅத்தின் \'மார்க்காஜ்\' (மையத்தில்) தொடர்ந்து தங்கியிருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தார்கள்.இதனையடுத்து டெல்லி அதிகாரிகள் இம்மசூதியை முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது மசூதியில் தங்கி இருந்த 300க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கொரோனா பரிசோதனைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.*இதனிடையே,  கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மதகுரு மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.*நிஜாமுதீனில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 85 பேர் எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர், இன்று 68 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர், எனவே மொத்தம் 153 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு நோய்த்தொற்றுக்கு பரிசோதிக்கப்படுகிறார்கள்\' என்று எல்.என்.ஜே.பி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜே சி பாஸ்ஸி தெரிவித்தார்.*இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற டெல்லியைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.மாநாட்டில் பங்கேற்ற 334 பேரை பரிசோதித்ததில் 24 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை