மனைவி, குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்க தனி ‘டென்ட்’ போட்டு வசிக்கும் டாக்டர்: அமெரிக்க ஊடகங்களில் பாராட்டு

தினகரன்  தினகரன்
மனைவி, குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்க தனி ‘டென்ட்’ போட்டு வசிக்கும் டாக்டர்: அமெரிக்க ஊடகங்களில் பாராட்டு

கலிபோர்னியா: கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாதுகாக்க தனி கொட்டகையில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர் டிம்மி செங். சமூக ஊடகங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். இவர், கலிபோர்னியாவின் இர்வின் நகரில் உள்ள யுசிஐ மருத்துவ மையத்தில் பணிபுரிகிறார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். கொரோனாவுக்கு சிகிச்சையளித்த பல மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பல மருத்துவர்கள், செவிலியர்கள் உயிர் இழந்துள்ளனர். இதனால், குடும்பத்தில் இருந்து பிரிந்த மருத்துவர் டிம்மி செங், தனி கூடாரம் (டென்ட் கொட்டகை) அமைத்து அதில் வசித்து வருகிறார். வழக்கமான மருத்துவமனை பணிகளை முடித்துக் கொண்டு திரும்பியபின், இந்த கூடாரத்திற்கு வந்துவிட்டு சில மணிநேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் பணிக்கு திரும்புகிறார். முன்னதாக மருத்துவர் டிம்மி செங் தனது பேஸ்புக் பதிவில், ‘நான் எனது சொந்த வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டேன். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் நான் பாதிக்கப்பட்டிருந்தாலும், எனது மனைவி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த முடிவை எடுத்தேன். நான் ஒரு நாள் இரவு காரில் வீட்டில் இருந்து வெளியே வந்தேன். மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது. தொடர்ந்து  நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது. ஐந்தாவது நாளில், என் மனைவி என்னிடம் தொடர்பு கொண்டு, கூடாரம் அமைக்கும் திட்டத்திற்கு ஒரு யோசனையை பரிந்துரைத்தார்’ என்றார். தொடர்ந்து தற்போது கூறுகையில், ‘கூடாரத்தில் குறைந்த வசதிகளுடன் தங்கியுள்ளேன். இன்னும் அடுத்த சில மாதங்களுக்கு கூடாரத்தில் தங்க வேண்டியிருக்கும். சுகாதாரப் பணியாளர்கள் வீட்டை விட்டு விலகி இருக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் தங்களது வீட்டிலேயே இருப்பது நல்லது’ என்றார்.

மூலக்கதை