மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கு ப.சிதம்பரம் 1 கோடி

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கு ப.சிதம்பரம் 1 கோடி

மும்பை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்துக்கு உதவிடும் நோக்கில், மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கு 1 கோடி வழங்குவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். இது குறித்து மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனா வைரஸ் பரவலால் மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிப்பதற்காக ப.சிதம்பரம் தனது பங்காக மகாரஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கு 1 கோடி வழங்குகிறார்’’ என குறிப்பிட்டுள்ளார். ப.சிதம்பரம் மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை