கொரோனா தனிமை வார்டுக்கு 20,000 பெட்டியை மாற்ற வேண்டும்

தினகரன்  தினகரன்
கொரோனா தனிமை வார்டுக்கு 20,000 பெட்டியை மாற்ற வேண்டும்

புதுடெல்லி:  ஏ.சி அல்லாத ரயில் பெட்டிகளை, கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் தனிமை வார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கான மாதிரி தயாரிக்கும் பணி, அரியானா மாநிலம், யமுனா நகரில் உள்ள வடக்கு ரயில்வேயின் ஜகத்கிரி பணிமனையில் நடந்தது. அங்கு ரயில் பெட்டி ஒன்று தனிமை வார்டாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டியில், நடுவில் இருக்கும் பெர்த் அகற்றப்பட்டுள்ளது. லோயர் பெர்த்தில் பிளைவுட் பொருத்தப்பட்டு, காற்று நிரப்பிய திரைகள் மூலம் தனி அறையாக மாற்றப்பட்டுள்ளது.  இதேபோல் 20,000 பெட்டிகள் தேவைப்படுகின்றன என ரயில்வே கூறியுள்ளது.இதுகுறித்து ரயில்வே வாரியம் மண்டல பொது மேலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘பெட்டிகளை மாற்ற பணிமனையை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளது.

மூலக்கதை