கொரோனா பாதிப்பால் பாக். ஸ்குவாஷ் நட்சத்திரம் ஆஸம் கான் மரணம்

தினகரன்  தினகரன்
கொரோனா பாதிப்பால் பாக். ஸ்குவாஷ் நட்சத்திரம் ஆஸம் கான் மரணம்

லண்டன்: பாகிஸ்தான் ஸ்குவாஷ் நட்சத்திரம் ஆஸம் கான், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக லண்டனில் காலமானார். பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் 1969, 1960, 1961ல் தொடர்ச்சியாக வென்று ஹாட்ரிக் சாதனை படைத்த ஆஸம் கான் (95 வயது), கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து லண்டன் ஈலிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஆஸம் கான் கடந்த சனிக்கிழமை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் 1956ல் இருந்து இங்கிலாந்தில் வசித்து வந்தார்.

மூலக்கதை