வீட்டை சுத்தம் செய்யும் பும்ரா | மார்ச் 30, 2020

தினமலர்  தினமலர்
வீட்டை சுத்தம் செய்யும் பும்ரா | மார்ச் 30, 2020

ஆமதாபாத்: ஊரடங்கு உத்தரவால் ஓய்வில் உள்ள இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, தினமும் இரண்டு முறை வீட்டை சுத்தம் செய்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் வரும் ஏப். 14 வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஓய்வில் உள்ள இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 26, தினமும் இரண்டு முறை வீட்டை கிருமி நாசினி கொண்டு துடைப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கான வீடியோவை தனது ‛டுவிட்டரில்’ பதிவிட்டுள்ளார்.

அவர் கூறுகையில்,‘உடற்பயிற்சியாக, தினமும் இரண்டு முறை வீட்டை நன்றாக சுத்தம் செய்கிறேன். இது, என் தாயாருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு முறை செருப்பு அணிந்தும், மற்றொரு முறை செருப்பு இல்லாமலும் வீட்டை துடைக்கிறேன்,’’ என, தெரிவித்திருந்தார்.

வீட்டில் கிரிக்கெட்

மும்பையில் உள்ள ஹர்திக், குர்னால் பாண்ட்யா சகோதரர்கள் வீட்டுக்குள் குடும்பத்தினருடன் கிரிக்கெட் விளையாடுகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கையாக அடிக்கடி கையில் கிருமி நாசினி தடவிக் கொள்கின்றனர். இதற்கான வீடியோவை குர்னால் பாண்ட்யா ‛டுவிட்டரில்’ பதிவிட்டுள்ளார். பாண்ட்யா சகோதரர்கள் வெளியிட்ட செய்தியில்,‘பாதுகாப்பாக அனைவரும் வீட்டிலேயே இருங்கள். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும். மத்திய அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தால் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கலாம். ஜெய் ஹிந்த்,’ என, தெரிவித்திருந்தனர்.

மூலக்கதை