சிறந்த பேட்ஸ்மேன் சச்சின்: ஷேன் வார்ன் தேர்வு | மார்ச் 30, 2020

தினமலர்  தினமலர்
சிறந்த பேட்ஸ்மேன் சச்சின்: ஷேன் வார்ன் தேர்வு | மார்ச் 30, 2020

மெல்போர்ன்: ‛‛தனது கால கட்டத்தில் விளையாடிய வீரர்களில் சச்சின், லாரா தான் சிறந்த பேட்ஸ்மேன்கள்,’’ என, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் கணித்துள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் ‛சுழல்’ வீரர் ஷேன் வார்ன் 50. இவர், ‛இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சியில் சிறந்த பேட்ஸ்மேன்களாக இந்தியாவின் சச்சின், விண்டீசின் லாராவை கணித்தார்.

இந்திய ஜாம்பவான் சச்சின், 200 டெஸ்ட் (15,921 ரன்கள்), 463 ஒருநாள் (18,426) போட்டிகளில் விளையாடினார். தவிர இவர், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதம் மற்றும் சர்வதேச அரங்கில் ‛சதத்தில்’ சதம் உட்பட நிறைய சாதனைகள் படைத்தார். விண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா 131 டெஸ்ட் (11,953 ரன்), 299 ஒருநாள் (10,405) போட்டிகளில் விளையாடினார்.

இதுகுறித்து வார்ன் கூறுகையில், ‛‛என்னுடைய கால கட்டத்தில் விளையாடிய வீரர்களில் சிறந்த பேட்ஸ்மேன்களாக இந்தியாவின் சச்சின், விண்டீசின் லாரா முன்னிலை வகித்தனர். இவர்கள் இருவரில், அனைத்து சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர் சச்சின் மட்டும் தான். டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் 400 ரன்களை ‛சேஸ்’ செய்யும் தகுதி லாராவுக்கு மட்டுமே உள்ளது,’’ என்றார்.

மூலக்கதை