கேரள முதல்வரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு: மது வழங்க பரிந்துரை செய்ய முடியாது: டாக்டர்கள் திட்டவட்டம்

தினகரன்  தினகரன்
கேரள முதல்வரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு: மது வழங்க பரிந்துரை செய்ய முடியாது: டாக்டர்கள் திட்டவட்டம்

திருவனந்தபுரம்: மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மது கொடுக்க அறிவுறுத்த முடியாது என டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர்.ஊரடங்கு உத்தரவால் கேரளா முழுவதும் அரசு மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் மன  அழுத்தத்துக்கு உள்ளான 5 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதையடுத்து  மதுவுக்கு அடிமையானவர்களுக்கு டாக்டர்களின் அறிவுரைப்படி மது வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தவும்  ஏற்பாடு செய்யப்படும் எனவும் கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவித்து  இருந்தார்.முதல்வரின் இந்த அறிவிப்புக்கு இந்திய மருத்துவ சங்கம்  கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மது  வழங்க நாங்கள் அறிவுறுத்த முடியாது என்று டாக்டர்கள் கூறி உள்ளனர்.  இதற்கிடையே புருஷோத்தமன் (48) என்பவருக்கு, மாலையில் 60 மி.லி பிரான்டி 3  பெக் முந்திரியுடன் குடிக்க டாக்டர் பரிந்துரை செய்ததாக ஒரு மருந்து சீட்டு  வாட்ஸ்-அப் உள்பட சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

மூலக்கதை