ஊரடங்கு உத்தரவால் பல்வேறு நாகரங்களில் குறைந்த காற்று மாசு: காற்றில் மிதக்கும் மின்துகள்களின் நச்சு குறைவு

தினகரன்  தினகரன்
ஊரடங்கு உத்தரவால் பல்வேறு நாகரங்களில் குறைந்த காற்று மாசு: காற்றில் மிதக்கும் மின்துகள்களின் நச்சு குறைவு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான பகுதிகளில் காற்று மாசுபாடு பலமடங்கு குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் நாட்டில் இருக்க கூடிய பெரும்பாலான முக்கிய தலைநகர்களில் காற்று மாசானது பல மடங்கு குறைந்துள்ளது. குறிப்பாக காற்றில் மிதக்கக்கூடிய மின்துகள்கள் பொதுவாக நகர்ப்புற பகுதிகளில் அதிகமாக இருசக்கர 4 சக்கர வாகனங்கள் வாயிலாக வெளிவரக்கூடிய புகை தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரக்கூடிய புகை, இவை அனைத்தும் காற்றில் மிதக்கக்கூடிய நச்சுத் தன்மை ஏற்படுத்தக்கூடிய மின்துகள்களாக பொதுவாக மிகுந்திருக்கும். அது காற்று மாசு ஏற்படுத்தி பொதுமக்கள், சுவாச கோளாறுகள் உள்ளவர்களுக்கு அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறு உள்ள அந்த காற்று மாசின் அளவானது தற்போது நாட்டில் உள்ள முக்கிய தலைநகரங்களான அதாவது டெல்லி, சென்னை உள்பட பல்வேறு முக்கிய தலைநகர்களில் காற்றின் மாசானது பல மடங்கு குறைந்துள்ளது. மின்துகள்களின் அளவானது இதற்க்கு முன்னதாக கடந்த 10, 15 ஆண்டுகளில் இது போன்ற குறைந்த அளவில் காணப்படவில்லை என கூறப்படுகிறது. முதல் நாள் ஊரடங்கானது பிறப்பித்த போது நாடு முழுவதும் ஏறத்தாழ டெல்லி போன்ற பகுதிகளில் பொதுவாக 200 மைக்ரோ கிராம் முதல் 300 மைக்ரோ கிராம் வரை காற்று மாசானது இருக்கும். ஆனால் தற்போது 150 மைக்ரோ கிராமிற்கும் குறைவாக காற்று மாசானது காணப்படுகிறது. சென்னையில் 80 மைக்ரோ கிராம் அளவிற்கு குறைந்துள்ளது. முக்கிய தலைநகரங்கள் எல்லாம் தற்போது சுவாசிக்க தகுதியான நகரங்கள் என்ற பட்டியலில் இடம்பெற கூடிய வகையில் காற்று மாசானது நாடு முழுவதும் குறைந்துள்ளது.

மூலக்கதை