இந்தியாவில் முதல் கொரோனா பரிசோதனை கருவியை உருவாக்கி நிறைமாத கர்ப்பிணி பெண் சாதனை!!.. குவியும் பாராட்டுக்கள்

தினகரன்  தினகரன்
இந்தியாவில் முதல் கொரோனா பரிசோதனை கருவியை உருவாக்கி நிறைமாத கர்ப்பிணி பெண் சாதனை!!.. குவியும் பாராட்டுக்கள்

மும்பை : கொரோனா பரிசோதனை கருவியை கண்டுபிடித்த பெண்ணுக்கு அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த மினால் போஸ்லே என்ற பெண்ணே பாராட்டுக்குரியவர் ஆவார். நிறைமாத கர்ப்பிணியான இவர், மை லாப டிஸ்கவரி என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மினால் தலைமையிலான குழுவினர் இரவு பகல் பாராமல் உழைத்து 6 வாரங்களில் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். வீட்டில் இருந்தபடியே கருவியை கண்டுபிடிக்க பாடுபட்ட மினால் அடுத்த நாளே பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மினாலே பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.கொரோனா பாதிப்பை வேறு பரிசோதனை கருவிகள் மூலம் கண்டறிய சுமார் 8 மணி நேரம் ஆகும். ஆனால் மினால் போஸ்லே கண்டுபிடித்துள்ள புதிய கருவி மூலம் 2.5 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பை கண்டுபிடித்துவிடலாம். ஒரு கருவி மூலம் 100 பேரின் ரத்து மாதிரிகளை ஆய்வு செய்ய முடியும். குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்டோர் மினால் போஸ்லேவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை