27 மாநிலம்…. 1071 பேருக்கு பாதிப்பு... 100 பேர் குணம்…. 29 பேர் உயிரிழப்பு….. கொரோனா பிடியில் இந்தியா …!!

தினகரன்  தினகரன்
27 மாநிலம்…. 1071 பேருக்கு பாதிப்பு... 100 பேர் குணம்…. 29 பேர் உயிரிழப்பு….. கொரோனா பிடியில் இந்தியா …!!

டெல்லி : இந்தியாவில் 1071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரத்தின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071ஆக அதிகரித்துள்ளது. 100 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணம் அடைந்து இருப்பதாகவும்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 193 பேரும், கேரளாவில் 194 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. டெல்லியில் 53 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 75 பேருக்கும், கர்நாடகாவில் 80 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளது. ராஜஸ்தானில் 57 பேருக்கும்,  தெலுங்கானாவில் 69 பேருக்கும், பஞ்சாபில் 38 பேருக்கும், ஹரியானாவில் 33 பேருக்கும், குஜராத்தில் 58 பேருக்கு கொரோனா  தாக்கம் உள்ளது.பனி பிரதேசமான லடாக்கில் 13 பேருக்கும்,  தமிழகத்தில் 50 பேருக்கும், அண்டை மாநிலமான ஆந்திராவில் 19 பேருக்கும்,  ஜம்மு-காஷ்மீரில் 31 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.மத்திய பிரதேசத்தில் 33 பேருக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் 19 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளது.உத்தரகாண்டில் 7 பேருக்கும் , ஹிமாச்சலில் 3 பேருக்கும், ஒடிசாவில் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. சத்தீஸ்கர் 7 பேருக்கும், பீகாரில் 11 பேருக்கும், அந்தமானில் 9 பேருக்கும் சண்டிகரில் 8 பேருக்கும், கோவாவில் 5 பேருக்கும், மணிப்பூர், மிசோரம், புதுச்சேரியில் ஆகிய மாநிலங்களில் தலா 1வருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான 1071 பேரில் 49 பேர் வெளிநாட்டினர் ஆவர். இன்று காலை வந்த தகவலின் படி மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 70க்கும் அதிகமானோரும், தலைநகர் டெல்லியில் 80க்கும் மேற்பட்டோரும் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதே போல ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே இன்று மாலை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

மூலக்கதை