கொரோனா பாதிப்பில் அதிகமாக ஆட்டம் காணும் மகாராஷ்ட்ரா, கேரளா: 200-ஐ கடந்து செல்லும் பாதிப்பு எண்ணிக்கை

தினகரன்  தினகரன்
கொரோனா பாதிப்பில் அதிகமாக ஆட்டம் காணும் மகாராஷ்ட்ரா, கேரளா: 200ஐ கடந்து செல்லும் பாதிப்பு எண்ணிக்கை

திருவனந்தபுரம்: இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா, மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200 மேல் அதிகரித்து சென்று கொண்டிருக்கிறது. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்தியாவில் தற்போது தனது தீவிரத்தை காட்டி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க 21 நாட்களுக்கு நாடு தழுவிய அளவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலம் புல்தானாவில் கொரோனா தொற்று பாதித்த 45 வயது நபர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் முழு விவரங்கள் பின்வருமாறு;கேரளாகேரளாவில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 202ஐ தொட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில்தான் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவிற்கு எதிராக அம்மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் தோல்வி அடைந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா சோதனைகளை அதிகம் செய்த மாநிலம் கேரளாதான். இதுவும் கூட அங்கு அதிக கொரோனா நோயாளிகள் இருப்பதற்கு காரணம் ஆகும். அங்கு மிக துரிதமாக கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. இதுவரை 6000 பேர் அங்கு கொரோனா சோதனைக்கு உள்ளாகி உள்ளனர். அதிகமாக காசர்கோட்டில்தான் 90 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கண்ணூரில் 33 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிராமாநிலத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணி்க்கை 203 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து சென்றுள்ளனர். 155 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.தானே மண்டலத்தில் 107 பேர், புனேவில் 37 பேர், நாக்பூரில் 13 பேர், அகமது நகரில் 3 பேர், ரத்னகிரி, அவுரங்காபாத், சிந்துதுர்கா, ஜல்கான், புல்தானா ஆகிய நகரங்களில் தலா ஒருவர், யவதம்மாலில் இருவர், மிராஜில் 25, சதாராவில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் குணமடைந்து சென்றனர்.

மூலக்கதை