கொரோனாவால் கிடைத்த ஓய்வு கூட நல்லதுதான்...ரவி சாஸ்திரி சொல்கிறார்

தினகரன்  தினகரன்
கொரோனாவால் கிடைத்த ஓய்வு கூட நல்லதுதான்...ரவி சாஸ்திரி சொல்கிறார்

புதுடெல்லி: தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடியதால் மன ரீதியாக சோர்வடைந்திருந்த இந்திய கிரிக்கெட்  வீரர்களுக்கு, கொரோனா அச்சுறுத்தலால் கிடைத்திருக்கும் இந்த கட்டாய ஓய்வு நல்லதுதான் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இப்போது கிடைத்திருக்கும் கட்டாய ஓய்வு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மோசமானதல்ல.  நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் முடிவில் ஏற்பட்ட மனச்சோர்வு, காயத்தை சரிசெய்து கொள்ளலாம். கடந்த 10 மாதங்களில் நிறைய போட்டிகளில் விளையாடி விட்டோம். உலக கோப்பை போட்டிக்காக கடந்த ஆண்டு மே23ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டோம். அதன்பிறகு  10, 11 நாட்கள் மட்டுமே வீட்டில் இருக்க முடிந்தது. அதிலும் சில வீரர்கள் டி20, ஒருநாள், டெஸ்ட் என 3 வகை போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடினர். இங்கிலாந்துக்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ், பிறகு தென்ஆப்ரிக்காவில் விளையாடினோம். இந்தியாவில் இருந்த இரண்டரை மாதங்களில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் என பல்வேறு அணிகளுடன் விளையாடினோம். பின்னர் நியூசிலாந்து சென்றோம். இப்போதையே சூழல் கடினமானதுதான். ஆனால்  வீரர்களுக்கு கிடைத்திருக்கும் ஓய்வு வரவேற்கத்தக்கது. இவ்வாறு ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

மூலக்கதை