ஸ்டீவ் ஸ்மித் தடை ‘ஓவர்’: மீண்டும் கேப்டனாக தகுதி | மார்ச் 29, 2020

தினமலர்  தினமலர்
ஸ்டீவ் ஸ்மித் தடை ‘ஓவர்’: மீண்டும் கேப்டனாக தகுதி | மார்ச் 29, 2020

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் 2 ஆண்டு தடை முடிவுக்கு வந்ததால், மீண்டும் கேப்டனாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 30. கடந்த 2018ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3வது டெஸ்டில் சகவீரர் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்கு துணை போன அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்திற்கு, போட்டியில் பங்கேற்க ஒரு ஆண்டு தடை மற்றும்  கேப்டனாக 2 ஆண்டு தடைவிதிக்கப்பட்டார். ஒரு ஆண்டு தடையில் இருந்த மீண்ட இவர், கடந்த ஆண்டு போட்டிக்கு திரும்பினார்.

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன் தடை முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இவர், ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் கேப்டனாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல இவர், ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாகும் தகுதி பெற்றார். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் ஐ.பி.எல்., தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதேபோல சர்வதேச போட்டி மீண்டும் எப்போது நடக்கும் எனத் தெரியவில்லை.

மூலக்கதை