ரெய்னாவுக்கு பிரதமர் பாராட்டு | மார்ச் 29, 2020

தினமலர்  தினமலர்
ரெய்னாவுக்கு பிரதமர் பாராட்டு | மார்ச் 29, 2020

புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு நிவாரண நிதி வழங்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்த மீள இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா, ரூ. 52 லட்சம் வழங்கினார். இது, பிரதமர் (ரூ. 32 லட்சம்) மற்றும் உ.பி., மாநில முதல்வர் (ரூ. 21 லட்சம்) நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

இதற்கு பிரதமர் மோடி ‘டுவிட்டரில்’ பாராட்டு தெரிவித்திருந்தார். இதில் ‘‘இது ரெய்னாவின் புத்திசாலிதனமான ஐம்பது,’’ என, தெரிவித்திருந்தார்.

மூலக்கதை