இந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு: இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26-ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு: இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூகானில் முதன்முறையாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இத்தகைய வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலின் அபாயகரமான கட்டம் என கணிக்கப்பட்டு இருப்பது 3ம் நிலை. இதில்தான், தற்போது ஒரு சில நூறு பேருக்கு மட்டுமே தொற்றிய இந்த வைரஸ், ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர், லட்சம் பேருக்கு பரவக்கூடிய ‘சமூக தொற்று’ எனப்படும் படுபயங்கரமான நிலையை எட்டும். இந்தியா இன்னும் அந்த கொடூரமான நிலையை எட்டவில்லை. ஊரடங்கு உத்தரவு மூலம் அது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் இதனிடையே ஒரு சில உயிரிழப்புகளுக்கும், அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக 25-ஆக இருந்த நிலையில் மேலும் 1 பேர் உயிரிழந்த நிலையில் 26-ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 40 வயது பெண் உயிரிழந்தார். இதுவரை மகாராஷ்டிராவில் 7 பேர் உயிரிந்துள்ளனர். இதனிடையே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 867-ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 87-ஆக உள்ளது.

மூலக்கதை