கோஹ்லிக்கு புதிய ‘ஹேர்ஸ்டைல்’: மனைவி அனுஷ்கா அசத்தல் | மார்ச் 28, 2020

தினமலர்  தினமலர்
கோஹ்லிக்கு புதிய ‘ஹேர்ஸ்டைல்’: மனைவி அனுஷ்கா அசத்தல் | மார்ச் 28, 2020

புதுடில்லி: கோஹ்லியின் ‘ஹேர்ஸ்டைலை’ மனைவி அனுஷ்கா அழகாக மாற்றி அமைத்துள்ளார்.

‘கொரோனா’ வைரஸ் தொற்றை  தடுக்க, இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி, மனைவி அனுஷ்கா தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் கோஹ்லியின் ‘ஹேர்ஸ்டைலிஸ்ட்’ ஆக மாறி இருக்கிறார் அனுஷ்கா. அவரது தலைமுடியை தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியுள்ளார். இந்த ‘வீடியோ’வை ‘இன்ஸ்டாகிராமில்’ பதிவிட்டுள்ளார் அனுஷ்கா.

அதில் கோஹ்லி கூறுகையில்,‘‘இது போன்ற சமயங்களில் சமையலறை கத்தரிக்கோல் மூலம் ‘ஹேர்கட்’ செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டியுள்ளது. என் மனைவி செய்த அழகான ‘ஹேர்கட்’ என, குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை