பாதிப்பு! புவனகிரில் உளுந்து அறுவடை ....ஊரடங்கு உத்தரவு எதிரொலி

தினமலர்  தினமலர்
பாதிப்பு! புவனகிரில் உளுந்து அறுவடை ....ஊரடங்கு உத்தரவு எதிரொலி

புவனகிரி:ஊரடங்கு உத்தரவு காரணமாக புவனகிரி பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள உளுந்து, பயிர், காராமணி போன்றவை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிவாரணம் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புவனகிரி மற்றும் அதை சுற்றியுள்ள 50க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா அறுவடை முடிந்து உளுந்து, பச்சைப் பயிர் மற்றும் காராமணி வகைகள் மானாவாரியாக விதைப்பு செய்திருந்தனர்.
செடிகளில் தற்போது காய்த்து அறுவடைக்கு தாயாராக உள்ளது. அறுவடைக்கு தயாராகிய நிலையில் தற்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவால் கிராமங்களிலும் பொதுமக்கள் எந்தப்பணிகளையும் செய்யாமல் கட்டுப்பாட்டுடன் உள்ளனர்.
இதனால் அறுவடைக்கு தாயாராக இருந்த உளுந்து உள்ளிட்ட செடிகள் தற்போது கொளுத்தும் வெயில் தாக்கத்தால் காய்ந்து கருகி வருகிறது. ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறுவதற்குள் முற்றிலும் சேதமடையும் அவலம் ஏற்படுட்டுள்ளது. எனவே வேளாண்துறை மூலம் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மூலக்கதை