தொழிலாளர்களுக்கு உதவுங்கள்: தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்

வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், பெரும்பாலான தொழிலாளர்கள், தினக் கூலிகள் டெல்லியில் இருந்து காஜியாபாத் நோக்கி நடை பயணமாக செல்லத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய தனது டிவிட்டரில், `இன்று நூற்றுக்கணக்கான நமது சகோதர, சகோதரிகள் பசியுடனும், தாகத்துடனும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில், அவர்கள் உங்கள் நகரையோ, கிராமத்தையோ கடக்க நேர்ந்தால், முடிந்தவர்கள் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் கொடுத்து உதவுங்கள். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும்படி காங்கிரஸ் தொண்டர்களையும், தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். தொழிலாளர்களை தவிக்க விட்டதாக வந்த புகார்களை தொடர்ந்து உபி அரசு அவர்களை சொந்த ஊருக்கு கொண்டு சேர்க்க நேற்று 1000 பேருந்துகளை இயக்கியது.
மூலக்கதை
