டேங்கரில் தப்ப முயன்ற 10 பேர் சிக்கினர்

தினகரன்  தினகரன்
டேங்கரில் தப்ப முயன்ற 10 பேர் சிக்கினர்

மும்பையை அடுத்த பால்கர் மாவட்டத்தில் தலசாரி என்ற இடத்தில் உள்ள மகாராஷ்டிரா-குஜராத் எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுக் காலை இந்த வழியாக பால் டேங்கர் லாரி ஒன்று வந்தது. போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அந்த டேங்கரை வழிமறித்து சோதனையிட்டனர். காலி டேங்கருக்குள் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பதுங்கியிருந்தனர். இவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியிலிருந்து இவர்கள், பால் டேங்கருக்குள் பதுங்கி சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்றது தெரியவந்தது. அவர்களை ேபாலீசார் திருப்பி அனுப்பினர்.

மூலக்கதை