பாதிக்கப்பட்ட 81 நாடுகளுக்கு 187 லட்சம் கோடி நிதி தேவை: சர்வதேச நிதியம் மதிப்பீடு

தினகரன்  தினகரன்
பாதிக்கப்பட்ட 81 நாடுகளுக்கு 187 லட்சம் கோடி நிதி தேவை: சர்வதேச நிதியம் மதிப்பீடு

சர்வதேச நிதியத்தின் நிர்வாகம், நிதிக் குழுக்களின் செயல் கூட்டத்துக்கு பின்னர், இதன் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜியவா அளித்த பேட்டி: நடப்பாண்டுக்கான (2020-2021) ஆண்டுக்கான வளர்ச்சி வாய்ப்புகள் மறுபரிசீலனை செய்யப்பட்டது. அதில், 2009ம் ஆண்டை விட மோசமான பொருளாதார மந்தநிலைக்குள் உலக நாடுகள் சென்று கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு இதனை மீட்பதற்கான திட்டப்பணிகள் நடைபெறுகிறது. பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. வளரும் நாடுகளின் சந்தையில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. 2020ம் ஆண்டுக்கான ஆய்வு முடிவுகள் இன்னும் சில வாரங்களில் தெரிய வரும். கொரோனா வைரசை கட்டுப்படுத்தாத வரை, எதிர்பாராத பொருளாதார தேக்கத்தினால் ஏற்படும் திவால், ஆள்குறைப்பு ஆகியவற்றின் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு நீண்ட நாட்களாகும். இதனால் மீண்டு எழுவது மட்டுமல்லாமல், சமூகமும் அழிவுக்கு இட்டு செல்லப்படும். கொரோனா தாக்கத்தின் பாதிப்பினால், இதுவரை 50 குறைந்த வருமானம் கொண்டு நாடுகள் உள்பட 81 நாடுகளில் இருந்து அவசர நிதி கோரப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஒட்டுமொத்த நிதி தேவை ஏறக்குறைய 187.50 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அந்நாடுகள் ஏற்கனவே ஒதுக்கியிருக்கும் நிதி, உள்நாட்டு வளங்கள் போதுமானதாக இல்லை என்று தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை