உலக தலைவர்களும் தப்பவில்லை இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா: சுகாதார அமைச்சரும் பாதிப்பு

தினகரன்  தினகரன்
உலக தலைவர்களும் தப்பவில்லை இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா: சுகாதார அமைச்சரும் பாதிப்பு

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு இதுவரை 5.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனாவின் கோர பிடியில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை மட்டுமின்றி, உலக தலைவர்களும் தப்பவில்லை. இங்கிலாந்திலும் இதன் பாதிப்பு கடுமையாக உள்ளது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 115 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளது. பாரம்பரிய நகரமான லண்டனில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம் இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (55) கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக கொரோனா தீவிரம் அடைந்துள்ளதால், இங்கிலாந்து ஆட்சியாளர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திப்பதை தவிர்த்து வந்தனர். மேலும், வைரஸ் அறிகுறி இல்லாவிட்டாலும் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நேற்று முன்தினம் லேசான காய்ச்சல், சளி பிரச்னை இருந்ததால் உடனடியாக பரிசோதிக்கப்பட்டார்.நேற்று வெளியான பரிசோதனை முடிவில், அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இது குறித்து அவர் தனது டிவிட்டரில் வெளியிட்ட வீடியோவில், ‘தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். இனி வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவேன். கொரோனாவை எதிர்த்து போராடும் அரசு பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கேட்டறிவேன்,’ என்றார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்நாட்டின் சுகாதார செயலாளர் மேட் ஹேன்காக்குkdkgம் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், ஒரே நாளில் பிரதமருக்கும், சுகாதார அமைச்சருக்கும்ண அடுத்தடுத்து கொரோனா உறுதிபடுத்தப்பட்டது இங்கிலாந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி சைமண்ட்ஸ் கர்ப்பிணியாக உள்ளார். அவரும் தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்ராணி எலிசபெத் நலம்ஏற்கனவே, இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு (வயது 71) கொரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்டு அவர் ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். பங்கிங்காம் அரண்மனையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் உடனடியாக இங்கிலாந்து ராணி எலிசபெத் அரண்மனையை காலி செய்து லண்டனில் இருந்து வெளியேறினார். அவர் கடைசியாக மார்ச் 11ம் தேதி பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்துள்ளார். தற்போது, ராணி எலிசபெத் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக பங்கிங்காம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை