வேளாண் சார்ந்த பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
வேளாண் சார்ந்த பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி : வேளாண் சார்ந்த பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. நாடு முழுவதும் இதே நிலை ஏற்பட்டதால் ஆங்காங்கே போலீசார் வழக்குப்பதிவு செய்தும் கைது செய்தும் வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். தேவையில்லாமல் மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.இதில் அத்தியாவசிய பொருட்களின் தேவை மிகவும் முக்கியம் என்பதால் இதற்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்து வருகின்றன. இதற்காக உள்துறைஅமைச்சகம் பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்தது. இதில், அறுவடை இயந்திரங்கள், வேளாண் உபகரண இயந்திரங்கள் மாநிலங்களிடையே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதே போல உரங்கள், பூச்சி மருந்து , விதை உற்பத்தி நிறுவங்கள் செயல்படவும் தடையில்ல , வயல்களில் வேளாண் சார்ந்த பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்று விளக்கியுள்ள உள்துறை அமைச்சகம், வேளாண் விளை பொருள் கொள்முதல் நிலையங்கள் வழக்கம் போல இயங்கலாம் என்று அறிவுறுத்தி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்படை முற்றிலும் குறைப்பதற்கு உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மூலக்கதை