கொரோனா போரில் வெற்றி: கபில்தேவ் உறுதி | மார்ச் 27, 2020

தினமலர்  தினமலர்
கொரோனா போரில் வெற்றி: கபில்தேவ் உறுதி | மார்ச் 27, 2020

புதுடில்லி: ‘‘கொரோனாவுக்கு எதிரான போரில் மனிதகுலம் வெல்லும். அனைவரும் வீட்டிற்குள் இருந்து அரசுக்கு ஒத்துழைப்போம்,’’ என, கபில்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் ‘கொரோனா’ வைரஸ் பிடியில் சிக்கி கதறுகிறது. வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் கூறியது:

‘கொரோனாவை’ எதிர்க்க ஒரே வழி வீட்டிற்குள் இருப்பது தான். இதனை நேர்மறை சிந்தனையுடன் அணுக வேண்டும். உங்கள் குடும்பம் தான் உலகம். குடும்ப உறுப்பினர்களுடன் பேசி நேரத்தை செலவிடுங்கள். புத்தம் படிக்கலாம். ‘டிவி’ பார்க்கலாம். மனதுக்கு இதமான இசையை வீட்டில் இருந்தே கேட்கலாம். 

என் சமையல் என்னை பொறுத்தவரை வீட்டை சுத்தம் செய்கிறேன். தோட்டத்தை பராமரிக்கிறேன். கடந்த பல ஆண்டுகளாக குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியவில்லை. இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பில் குடும்பத்தினருடன் பேசி மகிழ்கிறேன். அவர்களுக்கு என் கையால் சமைக்கிறேன். 

மக்கள் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கைகளை நன்கு கழுவுதல் அவசியம். பொது இடங்களில் சிறுநீர் கழிக்க கூடாது. தங்களது பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 

‘கொரோனா’ வைரஸ் பிரச்னையில் இருந்து இந்தியா விரைவாக மீளும். இக்கட்டான தருணங்களில் இருந்து மனிதகுலம் மீண்ட சம்பவங்கள் குறித்து நிறைய படித்திருக்கிறேன். இம்முறையும் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்து ‘கொரோனா’ போரில் வெல்வோம். அரசின் உத்தரவை கடைபிடிப்போம். இந்தியாவின் பலம் அதன் சிறந்த கலாசாரம் தான். இதன்படி மூத்தோர்களை பாதுகாப்போம். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.

இவ்வாறு கபில் கூறினார்.

மூலக்கதை