100 நாள் வேலை திட்டம் நிலுவை ஊதியம் வழங்க ரூ.4,431 கோடி ஒதுக்கீடு: ஏப்.10ம் தேதி கிடைக்கும்

தினகரன்  தினகரன்
100 நாள் வேலை திட்டம் நிலுவை ஊதியம் வழங்க ரூ.4,431 கோடி ஒதுக்கீடு: ஏப்.10ம் தேதி கிடைக்கும்

புதுடெல்லி: கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் நிலுவை ஊதிய தொகையை வழங்க முதற்கட்டமாக ₹4,431 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. நாடு முழுவதும் முழு ஊரடங்கால், தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்ட பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கட்டான இந்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை தொகை உடனடியாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, ₹11,499 கோடி மொத்த தொகையில், முதற்கட்டமாக ₹4,431 கோடி நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகை வரும் ஏப்ரல் 10ம் தேதி அனைத்து பயனாளர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 8.17 கோடி பேர் பணியாற்றி வருகின்றனர். 8 மாநிலங்களுக்கு ₹5,751 கோடி நிதி:  கடந்த ஆண்டு ஏற்பட்ட புல்புல் புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களுக்கு கூடுதலாக ₹5,751 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நிதியை கேரளா, மகாராஷ்டிரா, பீகார், நாகலாந்து, ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகியவை பெறுகின்றன.

மூலக்கதை