‘உலக’ தகுதிச் சுற்று ஒத்திவைப்பு: ஐ.சி.சி., அறிவிப்பு | மார்ச் 26, 2020

தினமலர்  தினமலர்
‘உலக’ தகுதிச் சுற்று ஒத்திவைப்பு: ஐ.சி.சி., அறிவிப்பு | மார்ச் 26, 2020

துபாய்: அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்தியாவில், அடுத்த ஆண்டு ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடரின் 8வது சீசன் நடக்கவுள்ளது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் கொரியா, விண்டீஸ், ஆப்கானிஸ்தான் உட்பட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 8 இடங்களுக்கு தகுதிச் சுற்று பல்வேறு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வரும் ஜூன் 30 வரை நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டிகள் அனைத்தும் ரத்து செய்வதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்துள்ளது.

இதன்படி வரும் ஏப். 16–21ல் குவைத்தில் நடக்கவுள்ள ஆசிய அணிகளுக்கான ‘ஏ’ பிரிவு தகுதிச் சுற்று, மே 16–22ல் ஸ்பெயினில் நடக்கவுள்ள ஐரோப்பிய அணிகளுக்கான ‘ஏ’ பிரிவு தகுதிச் சுற்று, ஜூன் 26 – ஜூலை 2ல் மலேசியாவில் நடக்கவுள்ள ஆசிய அணிகளுக்கான ‘பி’ பிரிவு தகுதிச் சுற்று, வரும் ஜூன் 24–30ல் பின்லாந்தில் நடக்கவுள்ள ஐரோப்பிய அணிகளுக்கான ‘பி’ பிரிவு தகுதிச் சுற்று உட்பட ஒத்திவைக்கப்பட்டன.

மூலக்கதை