உதவும் வீரர்கள்

தினகரன்  தினகரன்
உதவும் வீரர்கள்

விளையாட்டு களத்தில் மட்டுமல்ல, கொரோனா களத்திலும் உதவும் வீரர், வீராங்கனைகளின் பட்டியல்:உள்ளே* மேற்கு வங்கத்தில் பள்ளி உட்பட பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி   50 லட்சத்துக்கு அரிசி  வாங்கி தர உள்ளார்* பேட்மின்டன் உலக சாம்பியன் பி.வி.சிந்து தலா 5லட்சம் ரூபாயை ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளிடம் நன்கொடையாக அளித்துள்ளார்.* மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் அவிஷேக் டால்மியா 5லட்சத்தை மேற்கு வங்க மாநில நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.* கிரிக்கெட் சகோதரர்கள் இர்பான் பதான், யூசுப் பதான் ஆகியோர் 4 ஆயிரம்  முகமூடிகளை வழங்க திட்டமிட்டுள்ளனர்.வெளியே* கால்பந்து வீரர்கள் லியோனல் மெஸ்ஸி(அர்ஜெண்டீனா), கிறிஸ்டியன் ரொனால்டோ(போர்ச்சுகல்), மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளர் பெப்  கர்டியோலா(ஸ்பெயின்) ஆகியோர் கொரோனாவை எதிர்கொள்ளும் பணிகளுக்கு  தலா ஒரு மில்லியன் யுரோ(இந்திய மதிப்பில் சுமார் 8.25கோடி)  வழங்கியுள்ளனர்.* அமெரிக்காவின் பேஸ் பால் அணியான அட்லாண்டா பிரவோஸ் 1.25லட்சம் டாலரை(இந்திய மதிப்பில் 94.24லட்சம்) அட்லாண்டா மாநிலத்திற்கு  வழங்கியுள்ளது.* பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பாக்.வீரர்கள் 50 லட்சம் ரூபாயை  பாகிஸ்தான் அரசுக்கு வழங்கியுள்ளனர். வாரியத்தின் முதல்  நிலைய அலுவலர்கள் 2நாள் ஊதியத்தையும், மற்றவர்கள் ஒருநாள் ஊதியத்தையும் வழங்க உள்ளனர்.

மூலக்கதை