கொரோனாவுக்கு கால்பந்து வீரர் பலி

தினகரன்  தினகரன்
கொரோனாவுக்கு கால்பந்து வீரர் பலி

ஆப்ரிக்க நாடான சோமாலியாவை சேர்ந்தவர் கால்பந்து வீரர் அப்துல்காதிர் முகமது ஃபாரா(59). இவர் சோமாலியா நாட்டுக்காக பல்வேறு சர்வதேச  போட்டிகளில் விளையாடி உள்ளார். அந்நாட்டின் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சகத்தின்  ஆலோசராக முகமது ஃபாரா பணியாற்றி வந்தார்.  கொரோனா தொற்றுக்கு ஆளான முகமது ஃபாரா லண்டனில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அதனை ஆப்ரிக்க கால்பந்து  கூட்டமைப்பு(சிஎஎஃப்), சோமாலியா கால்பந்து கூட்டமைப்பு(எஸ்எப்எப்) ஆகியவை நேற்று உறுதி செய்தன.

மூலக்கதை