வீடு விற்பனை 42% சரிவு

தினகரன்  தினகரன்
வீடு விற்பனை 42% சரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் முக்கியமான 7 நகரங்களில் வீடு விற்பனை சராசரியாக 42 சதவீதம் சரிந்துள்ளது.  கடந்த ஜனவரி முதல் மார்ச்  வரையிலான காலாண்டில் வீடு விற்பனை தொடர்பான புள்ளிவிவரங்களை தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, நாடு  முழுவதும் மும்பை, பெங்களூரு உட்பட முக்கியமான 7 நகரங்களில் வீடு விற்பனை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது. பொருளாதார  மந்தநிலை மட்டுமின்றி, கொரோனா வைரஸ் பாதிப்பும் முக்கிய காரணம்.  கடந்த ஆண்டு ஜனவரி - மார்ச் மாதங்களுடன் ஒப்பிடும்போது விற்பனை  42 சதவீதம் சரிந்துள்ளது. புதிய கட்டுமானங்கள் 41,200ஆக குறைந்து விட்டது. அதேநேரத்தில், கட்டுமான நிறுவனங்களிடம் விற்கப்படாமல் தேங்கிய கட்டுமானங்களில் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்து 6.44 லட்சமாக உள்ளது.  மும்பையில் புதிதாக 10,480 கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 61 சதவீதம் சரிவு. இதுபோல் பெங்களூருவில் 5  சதவீதம், என்சிஆர் பகுதியில் 23 சதவீதம் கட்டுமான பணிகள் குறைந்துள்ளன. விற்பனையை பொறுத்தவரை, ஐதராபாத்தில் 50 சதவீதம், மும்பை  மற்றும் என்சிஆரில் 40 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது என புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை