உறவை துண்டிப்பேன்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
உறவை துண்டிப்பேன்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

சீனாவின்  வுகான் நகரில்தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் உருவானது.  அப்போது, அது பற்றிய உண்மை நிலவரத்தை சீனாவுடன் சேர்ந்து  உலக சுகாதார அமைப்பும் மூடி மறைத்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில்,  கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு மிகவும் ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது. இது குறித்து பலர் அதிருப்தி   தெரிவித்துள்ளனர். உலக அமைப்பானது ஒருதலைபட்சமாக  நடப்பது நியாயமற்ற செயல். இதேநிலை நீடித்தால், கொரோனா பிரச்னை நீங்கிய பின்னர்  உலக சுகாதார அமைப்புஉடனான உறவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும்,’’  என்றார்.

மூலக்கதை