ரஷ்யாவில் விமான சேவை முழுமையாக நிறுத்தம்

தினகரன்  தினகரன்
ரஷ்யாவில் விமான சேவை முழுமையாக நிறுத்தம்

மாஸ்கோ: உலகை தன் கோரப்பிடியில் வைத்திருக்கும் கொரோனாவின் அச்சுறுத்தலினால் ரஷ்யாவில் 3 பேர் பலியான நிலையில், ஏறக்குறைய 800  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட உத்தரவில், `‘கொரோனா வைரஸ் தாக்குதலைக்  கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நள்ளிரவு (நேற்று) முதல் வெளிநாட்டு விமான சேவை நிறுத்தப்படுகிறது. இதில் இருந்து அரசு  விமானங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விதிகள் உள்நாட்டு விமான சேவைக்கு பொருந்தாது. வெளிநாடுகளில் தங்கி இருக்கும் ரஷ்யர்களைத் திருப்பி அழைத்து வருவதற்கான விமானங்கள் மட்டும் இயக்கப்பட உள்ளது. அந்த நாடுகள்  ரஷ்யர்களை திரும்பி அனுப்ப தடை விதித்திருந்தால், அவர்கள் அந்நாட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள்  தங்களை மருத்துவ பரிசோதனைக்கும் இரண்டு வாரம் தனிமைப்படுத்துதலுக்கும் உட்படுத்தி கொள்ள வேண்டும்’\' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை