3 அடுக்கு முகக்கவசம்: 16க்கு விற்க உத்தரவு

தினகரன்  தினகரன்
3 அடுக்கு முகக்கவசம்: 16க்கு விற்க உத்தரவு

இந்தியாவில் மூன்று அடுக்கு கொண்ட துணியல்லாத மைக்ரோ பேப்ரிக்கால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை அதிகபட்சமாக 16க்கு விற்க வேண்டும்  என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் பவன் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘ஏற்கனவே சாதாரணமான  2 மற்றும் 3 அடுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசங்களை தலா 8 மற்றும் 10க்கு விற்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 21ம் தேதி  உத்தரவிட்டது. இந்நிலையில், மைக்ரோ பேப்ரிக்கால் தயாரிக்கப்பட்ட 3 அடுக்கு முகக்கவசங்களின் விலை கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதாக வந்த  தகவலை தொடர்ந்து அதன் உற்பத்தியாளர்களிடம் பேசப்பட்டது. இதையடுத்து அதிகபட்சமாக அதை 16க்கு மட்டுமே விற்க வேண்டும் என்று  உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.ஐரோப்பாவில் 2,50,000 பேர் பாதிப்புஐரோப்பிய யூனியனில் 2,50,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதி அளவு இத்தாலி மற்றும் ஸ்பெயினில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஏஎப்பி செய்தி நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, இதுவரை ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 2,58,068 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்  14,640 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் மட்டும் அதிகபட்சமாக 74,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை 55 ஆனதுகர்நாடகா மாநிலம், பெலகாவியில் அமைச்சர் ராமுலு நேற்று அளித்த பேட்டியில், ‘‘கர்நாடகாவில் இதுவரை 1.30 லட்சம் பேருக்கு கொரோனா  வைரஸ் பரிசோதனை  நடந்துள்ளது. இதில், 55 பேருக்கு மட்டும் தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.  கவுரிபிதனூரில் 70 வயதானவர்  இறந்துள்ளார். இதன் மூலம், கர்நாடகாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில்  மக்கள்  அதிகளவில் கூடுவது குற்றம். மக்கள் அதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

மூலக்கதை