தண்ணீரை பயன்படுத்தணும் கைகழுவுவதில் கவனம் வேணும்! பார்த்து... பார்த்து!

தினமலர்  தினமலர்
தண்ணீரை பயன்படுத்தணும் கைகழுவுவதில் கவனம் வேணும்! பார்த்து... பார்த்து!

கோவை:'கொரோனா' வைரஸ் அச்சுறுத்தல் ஒரு புறம் இருக்க, மறுபுறம் தண்ணீர் அவசியம் அறியாமல் பலரும் வீணடித்து வருகின்றனர்; ஒவ்வொருவரும் 25 வினாடிகள் தண்ணீர் குழாயை திறந்து வைத்திருந்தால், எவ்வளவு வீணாகும் என யோசித்துப் பார்த்து, தண்ணீர் சிக்கனத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
கொரோனா வைரசில் இருந்து தப்ப, தினமும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கைகளை சோப், சானிட்டைசர் போட்டு, 20-25 நொடிகள் நன்றாக கழுவ, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், நம் மக்கள் பலர் தங்கள் இஷ்டத்துக்கு, தண்ணீரை பயன்படுத்த துவங்கி உள்ளனர்.ஒரு நாளைக்கு, குறைந்தது ஐந்து முறையாவது கை, கால்களை கழுவ முன்வந்தாலும், ஒவ்வொரு முறையும், ஒரு நிமிடம் வரை தண்ணீர் 'டேப்'களை திறந்து விடுகின்றனர்.
இது போன்று செய்வதால், அதிக தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. இது வரும் கோடை காலத்தில், மேலும் சிக்கலை ஏற்படுத்த, வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.இது குறித்து, சூழலியல் ஆர்வலர்கள் கூறியதாவது:கொரோனா தொற்றில் இருந்து, நம்மை பாதுகாத்துக் கொள்ள, கை, கால்களை சோப்பால் கழுவி, துாய்மையாக வைத்து கொள்வது அவசியம். ஆனால், பலர் சுத்தமாக கழுவுகிறேன் பேர்வழி என்று, குழாயை திறந்து வைத்தபடி கழுவுகின்றனர். குறிப்பாக, அபார்ட்மென்ட்களில் வசிக்கும் சிலர், இது போன்று தண்ணீரை வீணடிப்பதாக தகவல் வருகிறது.அதேநேரம், தண்ணீரை தேவை இல்லாமல், வீணடித்து விடக்கூடாது.
இன்று, நம் முன் மிகப்பெரிய சவாலாக கொரோனா உள்ளது. இந்நேரத்தில் தண்ணீர் பஞ்சம் போன்ற சிக்கல், ஒருபோதும் வந்துவிடக் கூடாது. இதனை கருத்தில் கொண்டு, தண்ணீரை தேவையான அளவு மட்டும், பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
தண்ணீரை மிச்சப்படுத்துவது எப்படி?
நம்மில் பலர், சோப்பு போட்டு தேய்த்து முடியும் வரை, குழாயை திறந்து வைக்கின்றனர். இதனால் தண்ணீர் வீணாகிறது. குறிப்பாக குழந்தைகள் இவ்வாறு செய்கின்றனர். இதை தவிர்க்க கற்றுக்கொடுக்க வேண்டும்.n முதலில் குழாயை திறந்து விட்டு, லேசாக கைகளை நனைத்து, உடனே மூடி விட வேண்டும்.n சோப்பு போட்டு 20- 25 செகண்டுகள் நன்கு தேய்க்க வேண்டும்.n மீண்டும் குழாயை திறந்து, கைகளை கழுவ வேண்டும்.இதற்கு மாறாக, நாம் ஒவ்வொருவரும் 20- 25 நொடிகள் தண்ணீர் குழாயை திறந்து வைத்தால், தினமும் எவ்வளவு தண்ணீர் வீணாகும் என, சிந்தித்து பார்க்க வேண்டும்.

மூலக்கதை