கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க`ஐசோலேஷன் வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள் : கிராமங்களுக்கு படை எடுக்கும் ரயில்வே

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க`ஐசோலேஷன் வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள் : கிராமங்களுக்கு படை எடுக்கும் ரயில்வே

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில்வே பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றித் தர இந்திய ரயில்வே முன்வந்துள்ளது.இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி வரை கொரோனா பரவலை தடுப்பதற்காக, அனைத்து பயணிகள் ரயிலையும் ரத்து செய்துள்ளது.இந்நிலையில், நேற்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்வே உயரதிகாரிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் ரயில்வே துறையால் கொரோனா வைரஸை விரட்ட என்ன என்ன உதவிகள் செய்ய முடியும் என விவாதிக்கப்பட்டது .வெண்டிலேட்டர்ஸ் தயாரிப்பது, தற்காலிக படுக்கைகள், ட்ராலிகள் தயாரிப்பது உள்ளிட்ட விஷயங்கள் பரிசீலிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கிராமங்கள் அல்லது மிகவும் பிந்தங்கிய சூழலில் உள்ள கிராமங்களுக்கு கழிவறைகளுடன் கூடிய ரயில் பெட்டிகளை தீவிர சிகிச்சை பிரிவாக`ஐசோலேஷன்’ வார்டாக மாற்றும் யோசனையையும் முன்வைக்கப்பட்டது.மேலும் பஞ்சாப்பில் இயங்கி வரும் ரயில்வே தொழிற்சாலை ரயில் பெட்டிகளை ஐசோலேஷன் வார்டாக மாற்றும் பணி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் இயங்கி வரும் ரயில் தொழிற்சாலையில் வெண்டிலேட்டர்களைத் தயாரிக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மூலக்கதை