சென்னையில் அனைத்து தேநீர் கடைகள் மூடல்: கடை உரிமத்தை புதுப்பிக்க கால நீட்டிப்பு தர வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
சென்னையில் அனைத்து தேநீர் கடைகள் மூடல்: கடை உரிமத்தை புதுப்பிக்க கால நீட்டிப்பு தர வேண்டுகோள்

சென்னை: கொரோனா தொற்று எதிரொலியாக சென்னையில் அனைத்து தேநீர்  கடைகளும் மூடப்பட்டுள்ளதால் அந்த தொழிலை நம்பியுள்ள 15 ஆயிரம் குடும்பத்தினர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழகம் முழுவதும் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் உரிமம் பெற்ற 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேநீர் கடைகள் உள்ளன. இவைகள் அனைத்தையும் மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளதால் சுமார் 15-ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு உதவ வேண்டும் என்று தேநீர் கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ம் தேதிக்குள் தேநீர் கடைகளின் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால் கொரோனா பரவுவதால் எப்.14-ம் தேதி வரை அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருக்கும். எனவே உரிமத்தை புதுப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சென்னை பெருநகர தேநீர் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை