22,020 பேரை பலி வாங்கிய கொரோனா.. இத்தாலியில் 7,503, ஸ்பெயினில் 4,089, சீனாவில் 3,287 உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
22,020 பேரை பலி வாங்கிய கொரோனா.. இத்தாலியில் 7,503, ஸ்பெயினில் 4,089, சீனாவில் 3,287 உயிரிழப்பு

வாஷிங்டன் : உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 22,020 உயிரிழந்த நிலையில், கொரோனாவுக்கு இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் பலி எண்ணிக்கை ஆயிரத்து 700-ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 17 ஆயிரத்து 446 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பினால் ஸ்பெயினில் மட்டும் 24 மணி நேரத்தில் 1,098 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளை பெரிய அளவில் அச்சுறுத்தி வரக்கூடிய இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. சுமார் 600க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளும் உயிரிழப்புகளும்.. இத்தாலி : 7,503ஸ்பெயின் : 4,089சீனா : 3,287ஈரான் :2,234பிரான்ஸ் : 1,331அமெரிக்கா : 1,036பிரிட்டன் : 465நெதர்லாந்து : 356இந்தியா: 16

மூலக்கதை