குஜராத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்வு: மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
குஜராத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்வு: மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43ஆக அதிகரிப்பு

அகமதாபாத் : குஜராத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக சீனாவில் வூகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கொலை நடுங்க செய்து வருகிறது. இந்த கொரோனா வைரஸால் உயிரிந்தவர்கள் எண்ணிக்கை 21,283ஆக உயர்ந்துள்ளது. 4,71,060 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும்1,14,218 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரசால் 650க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,14 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குஜராத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 39த்தில் இருந்து 43ஆக அதிகரித்துள்ள நிலையில், தற்போது 70 வயது முதியவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இதனால் குஜராத்தில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. சவுதியில் இருந்து திரும்பிய 85 வயது பெண், பவ்நகர் பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண் பலியாகி இருந்தார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை