டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரை சந்தித்த 800 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு: டெல்லி அரசு

தினகரன்  தினகரன்
டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரை சந்தித்த 800 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு: டெல்லி அரசு

டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரை சந்தித்த 800 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சமுதாய மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. வடகிழக்கு டெல்லியில் உள்ள  சமுதாய மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். மருத்துவரின் மனைவி மற்றும் மகளுக்கு  கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,  மார்ச் 12 -முதல் 18 வரை மஜ்பூரில் உள்ள கிளினிக்கிற்குச் சென்ற பார்வையாளர்கள் சுமார் 800 பேர் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். மேலும்,   தனிமைப்படுத்தலுக்கான  காலத்தின் போது  கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.  மருத்துவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததில் தொற்று ஏற்பட்டதா அல்லது பயணம் செய்த ஒருவருடன் தொடர்பு கொண்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மூலக்கதை